திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (12:00 IST)

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து: என்ன காரணம்?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஒருநாள் தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர இருக்கிறார் என்ற செய்தி தகவல் பரவியதை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது திடீரென இளையராஜா தனது பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்த இளையராஜாவின் செய்தி தொடர்பாளர் உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும் இதுகுறித்து இளையராஜாவின் உதவியாளர் அனுப்பிய வீடியோவை பார்த்து அவர் மன உளைச்சலில் இருப்பதால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு அவர் வரவில்லை என்றும் என்று தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது