திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:25 IST)

தியேட்டரில் ரஜினி, அஜித் படங்கள் மட்டும்தான் பார்ப்பேன் -அனிருத்

rajini ajith
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இவர் தியேட்டரில் ரஜினி  படம் மற்றும் அஜித் படங்கள் மட்டும்தான் அதிகம் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு அதிகப்படங்கள் கைவசம் வைத்திருப்பவர் அனிருத். இவர் இசையில் சமீபத்தில் ரிலீஸான பீஸ்ட், விக்ரம்,  திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

தற்போது, ஜெயிலர் மற்றும் இந்தியன்-2 படங்களுக்கான இசையமைப்பில் அனிருத் பிஸியாகவுள்ளார்.
Aniruth

இன்று தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸான நிலையில் இதுகுறித்த ஒரு   நிகழ்ச்சியில் பேசிய அனிருத், நான் தியேட்டரில் சென்று கம்மியாகத்தான் பார்ப்பேன். அதிலும், ரஜினி மற்றும் அஜித் படங்கள்தான் அதிகம் தியேட்டரில் பார்ப்பேன். அதன்பிறகு தனுஷ் படங்கள் பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.