சினிமாவில் 47 வது ஆண்டுகள்... சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் வைரல்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை எளிமையாகக் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலலாகி வருகிறது.
கர் நாடத்தில் பேருந்தில் ஷ்டைலாக டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த சிவாஜி ராவை , கடந்த 1975 ஆம் ஆண்டு அழைத்து வந்து தனது அபூர்வக ராகங்கள் என்ற படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்.
அதன் பின், வில்லனாக சிலபடங்களில் நடித்து, ஹீரோக்களை விட ஸ்டைலாக சண்டைப்போடும் நடிகராக பேசப்பட்டார்,
இதையடுத்து, ஹீரோவாக பைரவி, பில்லா, காளி, முரட்டுக் காளை, ஜானி, படையப்பா, முத்து, சிவாஜி, எந்திரன், 2.0, அண்ணாத்த உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
ஈய்த நிலையில், சினிமாவில் ரஜினியின் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அவரது மகள் ஐஸ்வர்யா ஒரு பேனர் மற்றும் கேக்குகளுடன் மிக எளிமையாக வீட்டில் நடந்த ன் இந்த விழா கொண்டாடப்பட்டது. இதில், ரஜினி, அவரது மனைவி லதா இருவரும் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.