1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:08 IST)

“இதனால் அஜித் சார் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நடித்தார்…” கார்த்தி சொன்ன சீக்ரெட்

இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக இருந்து தொடர்ந்து 4 படங்களை அவரை வைத்து இயக்கினார்.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி சினிமாவில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வீடியோ மூலமாக அவரை வாழ்த்தினார் சிவா. அப்போது சிவாவைப் புகழ்ந்து பேசிய கார்த்தி “சிவா மிகவும் இனிமையான இயக்குனர். அவர் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் நடிப்பவர்கள் அவரை 200 சதவீதம் நம்பும்படி நடந்துகொள்வார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் சிவா. அஜித் சார் ஒரு இயக்குனரோடு தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றுகிறார் என்றால் அது இதனால்தான்” எனக் கூறியுள்ளார்.