"பாண்டு பேப்பர்ல கையெழுத்து போட்டு தரேன்" அப்படி ஒருத்தரை காதலிக்கமாட்டேன்- டாப்ஸி!

Last Updated: வியாழன், 20 ஜூன் 2019 (14:35 IST)
தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.  மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 


 
தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இங்கு இவரால்  முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை எனவே பாலிவுட்கு பக்கம் பறந்தார். அக்கட தேசத்தில் அம்மணிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால்  இந்தியில் படுபேமஸ் ஆனார்.
 
சமீபத்தில் டாப்ஸி நடிப்பில் வெளியான கேம் ஓவர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு அவரின் மிரட்டலான நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. விமர்சகர்கள் எல்லாம் டாப்ஸியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருவதோடு, தன் கடின உழைப்பையும் வெளிப்படுத்தி  வெற்றிபடங்களை கொடுத்துவருகிறார் டாப்ஸி.
 
நடிகை டாப்ஸி இதற்குமுன் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். மேலும் பிக்பாஸ் மஹத் தான் அவரது முன்னாள் காதலர் எனவும் கிசுகிசுக்கள் வெளியானது.  இருப்பினும் அவர் இதுவரை தன்னுடைய காதல் விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக மீடியாவிடம் பேசியதில்லை. தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தென்னிந்தியர் ஒருவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பெரிய ஸ்டார் இல்லை எனவும் கூறியுள்ளார். 


 
மேலும் பேசிய அவர் "நான் எப்போதும் ஒரு சினிமா ஸ்டாரை காதலிக்கமாட்டேன். காதலில் ஒருவர் தான் ஸ்டாராக இருக்க வேண்டும். அது நான் மட்டும் தான். இதை பத்திரத்தில் வேண்டுமானால் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் ஒரு ஸ்டாரை(நடிகரை) காதலிக்க மாட்டேன்  " என டாப்ஸி  கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :