1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (13:35 IST)

விருது விழாவிற்கு வித்தியாசமான கவர்ச்சி உடையில் வந்த ஜான்வி கபூர் - புகைப்படங்கள்!

பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும்  ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.  குட்டி குட்டியாக உடையணிந்து பொதுவெளியில் ஹாயாக நடந்துவரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. 


 
இதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது விழாவில் நடிகை ஜான்வி கபூருக்கு  Rising Star of the Year விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவிற்கு ஜான்வி வித்தியாசமான பிங்க் நிற கவர்ச்சி உடையில் வந்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பிவிட்டார். 


 
பார்ப்பதற்கு சாதாரண பேண்ட் சூட் தான் என்றாலும் அதை வித்தியாசமான கவர்ச்சியில்  மாற்றியமைத்துள்ளார் ஜான்வியின் ஆடை வடிவமைப்பாளர். இதனால் புகைப்பட கலைஞர்கள் ஜான்வியை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளனர் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.