திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (12:56 IST)

காதல் கணவருடன் நைட் அவுட் - ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!

வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். 


 
கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா - சாயிஷா இணைந்து "டெடி" படத்தில் நடித்து வருகின்றனர். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.


 
படப்பிடிப்பின் இடைவெளியில் ஆர்யா - சாயிஷா இருவரும் வெளியில் சென்ற புகைப்படத்தை ஷாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்ஸ்களால் குவிந்து வருகிறது.