பிக்பாஸ்3 வீட்டில் கமலுடன் ரஜினி - இது வேற மாதிரி பிக்பாஸ்!

Last Updated: வியாழன், 20 ஜூன் 2019 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனை எட்டியுள்ளது. 3-வது முறையாக கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 
 
நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ப்ரோமோ வீடியோ என இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு சீசனை விட சற்று வித்தியாசமான முறையில் மக்களுக்கு சலிப்பு தட்டாதவகையில் இருக்கவேண்டும் என்பதற்காக சில மாற்றங்களையும் செய்துள்ளனர். அந்தவகையில் பிக்பாஸ் 2-வது சீசனில் அமைக்கப்பட்டிருந்த ஜெயிலுக்கு பதிலாக இம்முறை பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை பூந்தமல்லி அடுத்த ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட பிக்பாஸ் வீடு தயார் நிலையில் உள்ளது. இதில் இந்த முறை தமிழக கலாச்சாரம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஓவியங்களால் பிக்பாஸ் வீடு அழகுபடுத்தப்பட்டுள்ளது.   கார்டன் பகுதியில் கோபுரம், மார்கெட், கடைவீதி, ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
பிக்பாஸ் வீட்டில் நுழையும் போதே மேல் பகுதியில் அரிவாளுடன் வெட்ட கை ஓங்குவது போன்ற ஒரு பொம்மை உள்ளது, 10 தலைகொண்ட ராவணனின் உருவம் கொண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் ஒருபுறம் பேட்ட ரஜினியும், அதற்கு எதிரே ஆன்மீகவாதி ஸ்டைலில் கமல்ஹாசனும் அமர்ந்திருக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. 
 
அதுமட்டுமில்லாமல் லாரி மாடலில் கிச்சன், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ போன்ற அலங்கார பொருட்கள் என பிக்பாஸ் வீடு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாமல் இன்ட்ரெஸ்ட்டிங்காக இருக்கபோகும் இந்நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :