புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:01 IST)

நான் அரசியலுக்கு வரமாட்டேன்.. அந்த தகுதி எனக்கில்லை... பிரபல நடிகர் ’ஓபன் டாக்’

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், பாய்ஸ் என்ற படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 
இயக்குநர் சசி இயக்கத்தில், நடிகர் சித்தார்த் மற்றும்  நடிகர் ஜி.வி பிரகாஷ்குமார்  ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சல் பச்சை என்ற  படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த் போலீஸ்காரராக நடித்துள்ளார்.
 
இந்நிலையில்,  இப்படம் குறித்து, சித்தார்த் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என கேட்டார்.  அதற்கு, எனக்குள்ள் ஒரு உதவி இயக்குநர் உள்ளான். கதைகள் குறித்து எனக்குள் தோன்றும் சந்தேகத்தைக் கேட்டுக்கொள்வேன். ஆனால்  இயக்குநர் ஆவதற்கு தகுதி இன்னும்  என்னிடம்  வரவில்லை. என தெரிவித்தார். 
பின்னர், செய்தியாளர், டுவிட்டரில் நீங்கள் பதிவிடும் கருத்துகள் அரசியலுக்கா என கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு, நான் அரசியலுக்கு வந்தால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல முடியாமல் போகும். அதனால். நான் அரசியலுக்குள் நுழைய மாட்டேன் என கூறினார்.