தமிழ் சினிமாவுக்கு ஒரே ஒரு விருது! என்ன ஆச்சு கோலிவுட்டுக்கு?

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (20:16 IST)
66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவுக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் மொழிவாரியாக வழங்கப்படும் விருதுகளில் தமிழ் மொழிக்கு என 'பாரம்' என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தேசிய விருதுகள் பட்டியலில் தமிழ் படம் ஒன்று கூட இல்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது

இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதுகளில் ஏழு கன்னட மொழித் திரைப்படங்களும் ஆறு தெலுங்கு மொழித் திரைப்படங்களும் 4 மலையாள மொழித் திரைப்படங்களும் என தென்னிந்திய அளவில் விருதுகளை குவித்துள்ள நிலையில் தமிழ் சினிமா ஒரு விருதை கூட வாங்காமல் இருந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டாலும் அவர் தேர்வு செய்யப்பட்டது 'மகாநதி' என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக தான். அந்த படம் தமிழில் டப் ஆகி 'நடிகையர் திலகம்' என்று வெளிவந்தது. அது தமிழ் படத்தின் கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமா ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு 6 விருதுகளையும், 2017 ஆம் ஆண்டு மூன்று விருதுகளையும் பெற்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியும் ஒரு விருது கூட பெறாதது தமிழ் சினிமா படைப்பாளிகளின் கற்பனை வறட்சியா? அல்லது திறமை இல்லையா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு தமிழகத்தை ஒதுக்குவது போலவே தமிழ் சினிமாவையும் ஒதுக்குகிறதா? என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்
'பரியேறும் பெருமாள்' உள்பட ஒருசில படங்கள் விருதுகள் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தமிழ் சினிமாவுக்கு ஒரு விருது கிடைக்காதது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :