தமிழ் சினிமாவின் கதை(லை)ஞானத்துக்கு பாராட்டு விழா – ரஜினி, பாரதிராஜா பங்கேற்பு !

Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:22 IST)
தமிழ் சினிமாவின் கதைஞானம் என அழைக்கப்படும் கதாசிரியர் கலைஞானத்துக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 1970 முதல் 1990 வரைப் பல படங்களுக்கு கதாசிரியராகவும் பல படங்களின் திரைக்கதைகளிலும் பங்காற்றியவர் கலைஞானம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ் என அனைவரின் படங்களிலும் பணிபுரிந்தவர். இது நம்ம ஆளு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு இயக்குனர் பாரதிராஜா தலைமையில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா நடக்க இருக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்க இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :