வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (11:31 IST)

காஃபி டே தொழில் பூங்கா விற்பனை – கடனை அடைக்க அடுத்தகட்ட முடிவு !

காஃபி டே அதிபர் வி ஜி சித்தார்த்தா கடன் சுமையால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதன் தொழில் பூங்கா ஒன்று விற்பனை ஆக இருக்கிறது.

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடந்த மாதம் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்ள , அவரது சடலம் நேத்ராவதி ஆற்றில் பல மணி தேடலுக்குப் பின்பு கிடைத்தது. இதனிடையே சித்தார்த்தா எழுதியதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையால்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிறுவனத்துக்கு உள்ள 6400 கோடி ரூபாய் கடனை அடைக்க அந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழில் பூங்காவை விறபனை செய்ய அதன் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது. அந்த பூங்காவை  பிளாக்ஸ்டோன் நிறுவனம் மற்றும் சலர்பூரியா சாத்வா ஆகிய நிறுவனங்கள் இணைந்து வாங்க இருக்கின்றன. இதில் 90 சதவீத பங்குகள் பிளாக்ஸ்டோன் வசமும். எஞ்சிய 10 சதவீதத்தை சலர்பூரியா நிறுவனம் வைத்திருக்கும். இப்போது விற்பனையாகும் தொழில் பூங்கா தொழில்நுட்ப பூங்காவானது 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மெபாசிஸ், மைண்ட்ரீ, அசெஞ்சர் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன.