வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (16:48 IST)

நீங்கல்லாம் பெரிய்ய ஒழுங்கு மாதிரி பேசுரதுதான் வியப்பா இருக்கு-சின்மயி டுவீட்

chinmayi -vairamuthu
தமிழ் சினிமாவின் முன்னனி பாடகி சின்மயி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை வைத்த  நிலையில், தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மீ டு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார்.

இவருக்கு ஆதரவாக பலரும் கருத்துகள் கூறி வந்தனர். இந்த நிலையில் அவ்வப்போது இதுபற்றி சின்மயி தன் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஒரு நபர் டுவீட்டர் பக்கத்தில், ‘கவிஞர் வைரமுத்துவை உங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டு கால்ல விழுந்தது என்ன ரகம் தோழி?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பாடகி சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’யாருக்கு தெரியும் உங்க குடும்பங்கள்ள, சொந்த பந்தங்கள்ள எத்தன பாலியல் குற்றவாளிகள் ஒளிஞ்சிருக்காங்களோ? உங்க வீட்டு பெண்கள் உங்க மொகறைய நம்பி சொல்ல முடியாம எவ்ளோ பொறுத்துகிட்டாங்களோ?

தமிழ் நாட்ல மட்டுமில்ல உலகம் முழுக்க பாலியல் குற்றவாளிகள expose பண்ணாம வாய மூடிகிட்டு இருக்கணும்னு வளத்த உங்க சமுதாயமும்,ஈவு இறக்கமில்லாத பாலியல் குற்றவாளிகள வளத்து விடுற உங்க கலாசாரமும், வளர்ப்பும் இப்படியாபட்ட கேவலமான கேள்விகளத்தான் கேக்க வைக்கும். உன் வளர்ப்பு அப்படி.

2018 லெருந்து எத்தனையோ பெண்கள் அவங்க வீட்ல இருக்க் அப்பன், தாத்தன், மாமன், அண்ணன், மச்சான், தம்பி, அக்கா புருசன், தங்கச்சி புருசன், பக்கத்து வீட்டு மாமா, அப்பாவோட் பிசினஸ் பார்ட்னர்னு எத்தனையொ direct messages ல எத்தனையோ பாலியல் குற்றவாளிகள அடையாலம் காட்டிருக்காங்க. அவங்க குடும்பத்துல இருக்கவங்களே “குடும்ப மானம் போயிரும், வாய மூடு, உன் பாலியல் குற்றவாளிய கல்யானத்துக்கு, வீட்டு வீசேசத்துக்கெல்லாம் கூப்டுதான் ஆகணும், கால்ல விழு” அது இதுன்னு சொல்ற கலாசாரம் தான் இங்க.

இதுல உங்க வீட்டு பெண் கூட எனக்கு சொல்லிர்க்கலாம்.

ஏதோ நீங்கல்லாம் பெரிய்ய ஒழுங்கு மாதிரி பேசுரதுதான் வியப்பா இருக்கு.

உங்க லட்சணமே ரேப் அபாலஜிஸ்ட், துப்பட்டா போடுங்க டோலி லட்சணம்தான்.

இதுல என்ன கேள்வி கேக்குறாராம் யாரும்கும் தரியாத சொந்த பேர கூட சொல்ல அசிங்கப்படுற லபக்கு தாஸ்.

போயி பாலியல் குற்றவாளிகளுக்கு வாச்மேன் வேல பாரு. டைம் ஆச்சு’’ என்று பதிவிட்டுள்ளார்.