செவ்வாய், 4 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (17:40 IST)

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவி நயன்தாரா மற்றும் அவரது தந்தை தாய் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் அவரது விக்னேஷ்வனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்தை சிவக்கொழுந்து, விக்னேஷ்வனின் தாய் மீனா குமாரி, விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா மற்றும் விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran