புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified புதன், 5 அக்டோபர் 2022 (17:46 IST)

’வாரிசு’ படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை: குஷ்பு

kushboo
விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு குஷ்பு சென்றார் என்பதும் அவர் விஜய் மற்றும் சரத்குமார், பிரபு உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த போது தான் ’வாரிசு’ படத்தில் நடிக்கவில்லை என்றும் படப்பிடிப்பை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன் என்றும் அப்போது எடுத்த புகைப்படம் தான் அந்த புகைப்படங்கள் என்றும் ’வாரிசு’ படத்துக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் குஷ்பு  தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக அபாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் காபி வித் காதல் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 4ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva