திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (14:52 IST)

பிக்பாஸ் 6 தொடக்க நிகழ்ச்சிக்கு போட்டியாக விஜய் படத்தை திரையிடும் பிரபல தொலைக்காட்சி!

பிக்பாஸ் சீசன் 6 தொடக்க நிகழ்ச்சி இந்த வார இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் இந்த நிகழ்ச்சியை 5 சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் விரைவில் சீசன் 6 தொடங்க உள்ளது. இதற்கான ப்ரமோஷன்கள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது சன் தொலைக்காட்சி பிகில் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சீசன் 5 தொடக்க நாளின் போது இதே பிகில் படத்தை சன் தொலைக்காட்சி வெளியிட்டது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி ஆர் பி குறைந்ததாக சொல்லப்பட்டது.