செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:12 IST)

தயாராகி வரும் விஜய் 67 படத்துக்கான செட்… பரபர பணியில் லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.