வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:11 IST)

சிரஞ்சீவி படத்தில் நடிக்க சல்மான் கான் வாங்கிய சம்பளம் எவ்வளவு?... அவரே வெளியிட்ட தகவல்!

சல்மான் முதல் முறையாக ஒரு தென்னிந்திய படத்தில் காட்பாதர் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானை ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான் கான் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றிய தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

காட்பாதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு ஒன்றில் அவர் “இந்த படத்துக்காக தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வந்த போது தயவு செய்து போய் விடுங்கள் எனக் கூறிவிட்டேன்” எனப் பேசியுள்ளார்.