திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (09:46 IST)

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

பேன் இந்தியா ஸ்டாராக அறியப்படும் பிரபாஸ் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்து அவரது தாயார் கூறியுள்ளார்.

 

 

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் பிரபாஸ். இவர் நடித்த பாகுபலி படம் உலகளாவிய வசூல் மற்றும் ஹிட் அடித்த நிலையில் தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார். ஆனால் சமீபமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 

தற்போது 45 வயதாகும் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார். திருமணம் குறித்த கேள்விகளுக்கும் அவர் அவ்வளவு ஆர்வமாக பதில் அளிப்பது இல்லை. இந்நிலையில் பிரபாஸ் திருமணத்தை ஏன் விரும்புவது இல்லை என்பது குறித்து அவரது தாயார் கூறியுள்ளார். 

 

”பிரபாஸிற்கு ரவி என்ற நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை மோசமானதாக அமைந்துவிட்டதால் அது பிரபாஸை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் அவர் திருமணத்தை வெறுக்கிறார். விரைவில் அவர் மனம் மாறுவார் என நம்புகிறேன்” என அவரது தாயார் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K