ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த ’ஜெயில்’ மற்றும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த அடுத்த திரைப்படமான ’பேச்சிலர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றதாகவும் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் ஜீவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மேலும் சிலர் படக்குழுவினர்களிடம் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அடுத்த வாரம் முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் வரும் மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது
ஜீவி பிரகாஷ் ஜோடியாக இந்த படத்தில் திவ்யபாரதி நடித்து உள்ளார். சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கிய இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது