வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:29 IST)

மிஷ்கினின் அடுத்த படமும் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

மிஷ்கின் இயக்கியுள்ள அடுத்த படம் ’பிசாசு 2’ என்பதும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படமும் அவரது முந்தைய படத்தின் இரண்டாம் பாகம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’சைக்கோ’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கதையை மிஷ்கின் எழுதி முடித்து விட்டதாகவும் ’பிசாசு 2’ படத்தை முடித்துவிட்டு ’சைக்கோ 2’ படத்தை தான் அவர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது
 
முதல் பாகத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து தனது முந்தைய படங்களின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க இயக்க இருப்பதாக வெளிவந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது