செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (23:34 IST)

ஜிவி.பிரகாஷிற்கு விருதுகள் உண்டு- இயக்குநர் டுவீட்

ஜிவி.பிரகாஷ் குமாரின் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில்  இளம் நடிகர் ஜிவி.பிரகாஷ்குமார். இவர் சர்வம் தாளமயம் , நாச்சியார் உள்ளிட்ட படஙக்ளில் நடித்துள்ளார்.

தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துவரும் படம் இடி முழக்கம் .

இப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார் . வழக்கம் போல் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதுகிறார்.

இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிப் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்-ஐ இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.

அதில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.