திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (17:49 IST)

இந்த அரசும் அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம்: திமுக குறித்து கமல்ஹாசன் டுவிட்

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் திமுக ஆட்சியை குறித்து விமர்சனம் செய்யாமல் இருந்தார். ஆனால் இன்று திடீரென திமுக ஆட்சியையும் அவர் விமர்சனம் செய்துள்ளார் 
 
அதற்கு காரணம் கிராமசபை கூட்டத்திற்கு தடை என்ற அறிவிப்புதான். ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்திற்கு தடை என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன் தனது ஆவேசமான விட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. 
 
அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப்  புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.