1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (20:17 IST)

தயாரிப்பாளர் மனோகர் மறைவுக்கு குஷ்பு இரங்கல் டுவிட்

சின்னத்திரை தயாரிப்பாளர் மனோகர் அவர்களின் மறைவுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் 
 
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா உள்பட ஒருசில சீரியல்களை தயாரித்து வருபவர் மனோகர். இவர் இன்று கார் விபத்து ஒன்றில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்ததால் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் மனோகர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் என்றும் அமைதியானவர் என்றும் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்