திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (19:12 IST)

ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும்: ஜிவி பிரகாஷின் ‘13’ பட டீசர்

13 teaser
ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும்: ஜிவி பிரகாஷின் ‘13’ பட டீசர்
ஜிவி பிரகாஷ் நடித்த ‘13’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது
 
ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும் என்ற வசனம் உள்பட பல அதிரடி வசனங்கள் உள்ள இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் டீசரில் இருந்து தெரியவருகிறது
 
ஜிவி பிரகாஷ் மட்டுமின்றி கவுதம் மேனன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
விவேக் இயக்கத்தில், சித்துகுமார் இசையில், மூவேந்தர்ஒளிப்பதிவில் காஸ்ட்ரோ படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Edited by Mahendran