புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (14:51 IST)

தொடர் தோல்வி… தனது ஏரியாவுக்குள் மீண்டும் செல்லும் கௌதம் மேனன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் காவல்துறை சம்மந்தப்பட்ட வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் ஸ்டைலாகவும் கவித்துவமாகவும் படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். தனது பெரும்பாலான படங்களில் அவர் காவல்துறை பற்றி விதந்தோதும் காட்சிகளையோ அல்லது கதைக்களனையோ அமைத்திருப்பார். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்கள் போலிஸ் கதாநாயகர்களைக் கொண்ட கதை.

இந்நிலையில் அவர் இப்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அவர் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி பிளாட்பாரத்திற்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ்க்கு பிசி ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது காவல்துறைக்கும் கேங்ஸ்டார்களுக்கும் இடையே நடக்கும் கதை எனவும், இதற்கு மதகம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தனது சமீபகால படைப்புகள் எதுவும் வெற்றி பெறாத நிலையில் மீண்டும் தன் கம்போர்ட் ஸோனான காவல்துறை களத்துக்கு அவர் திரும்பியுள்ளார்.