1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (18:46 IST)

முதல் முறையாக பிசி ஸ்ரீராம் உடன் இணையும் கௌதம் மேனன்: பரபரப்பு தகவல்

கடந்த 2001 ஆம் ஆண்டு 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் கமல்ஹாசன், அஜித் உள்பட பல பிரபலங்களுடன் அவர் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்களுடன் கௌதம் மேனன் இன்னும் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குறையும் தற்போது நீங்கி விட்டது 
 
ஆம், கௌதம் மேனன் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓட்டி பிளாட்பாரத்திற்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ்க்கு பிசி ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
 
இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் நடைபெறும் என்றும் கௌதம் மேனனுடன் முதல் முறையாக இணைந்து பணிபுரிவது தனக்கு மகிழ்ச்சி என்றும் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெப்சீரிஸில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது