1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (20:16 IST)

’காட்மேன்’ சீரியலை சன் டிவி வாங்குகிறதா? பரபரப்பு தகவல்

சமீபத்தில் வெளியான ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் இந்த தொடர் வெளிவருமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஜீ5 நிறுவனம் ஒளிபரப்ப முடியாது என்று கூறிய ’காட்மேன்’ தொலைக்காட்சித் தொடரை சன் டிவி நிறுவனம் உரிமை பெறப் போவதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அரசியல் விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சமூக வளைதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இருப்பினும் சன் டிவி தரப்பிலிருந்து ’காட்மேன்’ தொடரை வாங்குவது குறித்த எந்தவித தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சன் டிவி தரப்பிடம் இருந்து வெளிவந்தால் மட்டுமே இந்த செய்தி உறுதி செய்யப்படும் என்றும் அரசியல் விமர்சகர் டுவீட்டை வைத்து இந்த தொடரை சன் டிவி வாங்க முயற்சிப்பதாக உறுதி செய்ய முடியாது என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்