திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2023 (18:06 IST)

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி....

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக 80, 90 களில் வலம் வந்தவர்  கவுண்டமணி.  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், விஜய்,  அஜித், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.

இதுவரை 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 10 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில்,  மீண்டும் நடிகர் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கவுள்ளார். இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கவுள்ளார். இப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, தம்பிராமையா, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.