1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (23:49 IST)

ரஜினிகாந்த் பவுண்டேசன் பெயரில் பண மோசடி..போலீஸில் புகார்

rajinikanath
நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற போலி சமூகவலைதள பக்கத்தை தொடங்கி பணமோசடி செய்துள்ளனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கிஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் அனிருத் இசையில் காவாலா, கும்கும் ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்த   நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேசன் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வரும் நிலையில், ரஜினி காந்த் பவுண்டேசன் பெயரில் பண மோசடி நடைபெற்றறுள்ளது.

ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற போலி சமூகவலைதள பக்கத்தை தொடங்கி பணமோசடி செய்துள்ளனர். இதுபற்றி ரஜினிகாந்த் பவுண்டேசன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ரூ. 2 கோடி வசூல் செய்து 200 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக கூறி பணமோசடி நடைபெற்றது குறிப்பிடத்தகக்து.