செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:14 IST)

பத்மாவத் படம் வெளியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ‘பத்மாவத்’ படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பத்மாவதி ரிலீஸ் தேதி ஒத்தி  வைக்கப்பட்டது. 
 
இதனால் தீபிகா படுகோனே மிரண்டு போனார். போலீஸ் பாதுகாப்புடனேயே தீபிகா படுகோனே வெளியில் செல்ல நேரிட்டது. தற்போது பிரச்சினைகள் ஒரு  வழியாக தீர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினால் படம் இந்தியா முழுவதும் நாளை அதாவது வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. தணிக்கை குழுவும் சர்ச்சை  காட்சிகளை வெட்டி படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என்று மாற்றி அனுமதி வழங்கி இருக்கிறது.
 
இதனால் நேற்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ‘பத்மாவத்’ படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று சித்தி விநாயகரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்துள்ளார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.