புகைப்படம் வெளியிட்டு மாட்டிக் கொண்ட குருமூர்த்தி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்
பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளது.
முகநூல் பக்கத்தில் பல வருடங்களாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக 1740 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் கட்டப்பட்டது. இந்திய பொறியாளர்களின் திறைமைக்கு இது முன்னுதாரணம் எனக் கூறி, ஒரு புகைப்படம் உலா வருகிறது.
ஆனால், அது உண்மையில் ராமேஸ்வரம் அல்ல. மத்தியபிரதேசத்தில் மந்து எனும் பகுதியில் உள்ள மசூதி என்பது உண்மையான செய்தியாகும். இது தெரியாமல் ஆர்வ கோளாறில் இப்போதும் பலர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தி பதிவு செய்திருந்தார். இதுகண்டு விபரம் அறிந்த சில நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். மேலும், உண்மையான ராமேஸ்வரம் கோவில் புகைப்படத்தையும் பதிவிட்டு, இது கூட தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள் என அவர்கள் பதிலளித்து வருகின்றனர்.