திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (14:04 IST)

பிரபல காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார் !

raju vastav
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுகு சினிமாத்துறையினர் சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் என்ற சீசனில் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார்.

நாட்டில் பிரபல  ஸ்டாண்ட் அப் காமெடில் நிகழ்ச்சி  நடிகராக அறியப்படும் அவர்,  கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி  ஜிம்மியில் உள்ள டீரெட்மில்லில்  உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு  நெஞ்சில் தீடீரென வலி ஏற்பட்டது.

இதனால் கீழே சரிந்து விழுந்த நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜிம்மின் பயிற்சியாளர் அவரை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு, நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தாவுக்கு சிபி ஆர் என்ற சிகிச்சை அளிக்கப்பட்டதில்  உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டது.
 


இதையடுத்து  அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கை அளிக்கப்பட்டது. ஆனால், சுய நினைவின்றி  ராஜு ஆகஸ்ட் 11 ஆம் தேதிமுதல் இன்று வரை தொடர்ந்து 41  நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 10 :30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.