திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (17:45 IST)

பிரபலமான நடிகர்களின் பட்டியலில் விஜய் முதலிடம் ! 2 ஆம் , 3 ஆம் இடங்களில் யார் தெரியுமா?

Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படமும் வெற்றி பெற்றது.
ajithkumar

இந்த நிலையில் பாலிவுட்டிற்கு இது பாய்காட் எனப்படும் போதாத காலமாக இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களை தர முயற்சிக்கிறது.

அந்தப் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு, அவர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றைத்தாண்டி ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம்.

இந்த நிலையில்,  நாட்டில் பிரபலமான நடிகர்கள் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பை  ஆர்.மேக்ஸ் மீடியா நிறுவனம் நடத்தியது. இதில், நடிகர் விஜய் முதலிடத்தையும்   நடிகர் அஜித்குமார்2  வது இடத்தையும்,  சூர்யா 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இது விஜய், அஜித், சூர்யா ஆகிய மூவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.