செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (08:36 IST)

மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்- எஸ் ஜே சூர்யா கூட்டணி!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 படத்துக்கான வேலைகளில் உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படம் பல்வேறு மொழிகலீல் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்தார்.  ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை இந்தியில் அந்த திரைப்படம் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி எஸ் ஜே சூர்யாவும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா 2 மூலமாக இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது.