வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (23:20 IST)

அரசியல் கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி பிரபல அரசியல் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை குட்டி பத்மினி பிஜேபி  கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  நான் கடந்த 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறேன். தற்போது பாஜக கட்சியில் இருந்து விலகுகிறேன். மேலும் மும்பையில் இருப்பதால் அரசியலில் ஈடுபட நேரமில்லை எனத் தெரிவித்துள்ளார்.