1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (17:32 IST)

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த சோனு சூட்!

நடிகரும் சமூக ஆர்வலருமான சோனுசூட் பிரபல அரசியல் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

அவரது சமூக சேவைக்கு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது,. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நடிகர் சோனுசூட்  இன்று அரசியலில் ஈடுபடப்போவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது ஒரு முக்கியல் தகவல் வெளியாகியுள்ளது. அதில், நடிகரும் சமூக ஆர்வலருமான சோனுசூட்டின் தங்கை மாளவிகா சூட் சச்சார் இன்று      பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் எஸ் சானி முன்னிலையில் காங்கிரச் கட்சியில் இணைந்துள்ளார். அப்போது நடிகர் சோனு சூட் உடனிருந்தார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.