வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (21:41 IST)

30 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகருடன் இணையும் நடிகை !

தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைப்பட்ட இயக்குநர் பாக்கியராஜ்  30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நடிகைக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி இயக்கு நராக வலம் வந்தவர். கே.பாகய்ராஜ். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்கிய படம் ராசுகுட்டி. இப்படத்தின் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.  பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ண்ணா தாஸ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்குகிறார். இப்படத்தை மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.