பிரபல நடிகர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் !!

Sinoj| Last Updated: சனி, 2 ஜனவரி 2021 (13:48 IST)
 

மறைந்த தொழிலதிபர் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த்துக்கு காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார் .

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழு ஈடுபாட்டுடன் உழைத்து வரும் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த்துக்கு காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளது.

அரசியலா? தொழிலா? விஜய்வசந்த் எடுத்த அதிரடி முடிவு

ஏற்கனவே, தனது தந்தையின் மறைவை அடுத்து, செய்தியாளர்களிடம் ‘’அரசியலில் களமிறங்க விரும்பமுள்ளது ’’எனக் கூறி தன்னை முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் வசந்த்த் இன்று காங்கிரஸ் தலைமையால் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் வசந்த் சென்னை 600028, விஜயின் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :