பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய் பட நடிகர் ! குவியும் லைக்ஸ் !!

Shanthanu
Sinoj| Last Modified புதன், 30 டிசம்பர் 2020 (22:10 IST)

பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு அட்வைஸ் செய்வதுபோல் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார் சாந்தனு பாக்யராஜ்.


சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் நல்ல விமர்சனத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஆந்தாலஜி வகைப் படமான பாவக்கதைகள். இவற்றை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இயக்கி வருகின்றனர். இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான தங்கம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார்.


.அதேபோல் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஷாந்தனு பாக்யராஜ். பிரபல இயக்குநர் மற்றும் நடிகரின் வாரிசாக அவர் இருந்தாலும் இந்த வெற்றிக்காக 12 வருடங்கள் காத்திருந்ததாக அவரே தெரிவித்திருந்தார்.

Prasanna

இந்நிலையில் பிரபல நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னாவுக்கு அவர் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் பிரசன்னாவின் டுவீட்டுக்குப் பதில் அளிப்பதுபோன்று, ‘’பொறுமையாக இருந்தால் எப்போதும் வெற்றியாளர் தான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ்,. மாஸ்டர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :