’வீரத்தமிழ் தலைவனுக்கு ’ பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! - டி. இமான் டுவீட்

iman
sinojkiyan| Last Updated: செவ்வாய், 26 நவம்பர் 2019 (16:28 IST)
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு எதிராக , ஈழத்தில் , தமிழர்களுக்கு ஆதரவாக தனி ராஜாங்கமே நடத்தியவர், விடுதலைப் புலிகள் அமைப்பின்  தலைவர்  பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்தினரால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரை ஈழத்தமிழர்கள் இன்றும் தங்கள் தலைவராகவே வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்த நாள் ஆகையால், பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது :
 
வீரத்தமிழ் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!  உங்கள் நினைவோடு என்றும் நாங்கள்!! எனப் பதிவிட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :