’தலைவர் 168’ படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

Last Modified புதன், 13 நவம்பர் 2019 (20:09 IST)
பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் திரையுலகில் பொற்கால ஆண்டுகள் என்றே கூறலாம். கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’, கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’சீமராஜா’ ஆகிய ஹிட் படங்களுக்கு இசை அமைத்த டி இமான், இந்த ஆண்டு அஜித் நடித்த ’விஸ்வாசம்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதில் அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதற்கெல்லாம் சிகரமாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168’படத்திலும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த டி இமான், தற்போது இருவரும் இணைந்துள்ள ’தலைவர் 168’ படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு இசையமைப்பாளரும் ரஜினி படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்து வரும் நிலையில் அந்த கனவு தற்போது அவருக்கு நிறைவேற உள்ளது. டி இமான் என்றாலே மெலடி மன்னர் என்ற பெயரைப் பெற்றுள்ள நிலையில் ரஜினிக்கும் அவர் இந்த படத்தில் மெலடி பாடல்களை கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :