திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (21:43 IST)

அசூரன் படம் விவகாரம் – இந்து சமூகத்தில் சாதிய சண்டையை புகுட்டும் - அகில பாரத இந்து மஹா சபா அறிவிப்பு

அசூரன் படம் விவகாரம் – இந்து சமூகத்தில் சாதிய சண்டையை புகுட்டும் விதமாக படம் அமைந்துள்ளதால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் கரூரில் அகில பாரத இந்து மஹா சபா அறிவிப்புவிடுத்துள்ளது.

தற்போது தனுஷ் நடிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள அசூரன் திரைப்படத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அகில பாரத இந்து மஹா சபாவின் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் மாயனூர் ராஜவேல், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது., தற்போது வெளிவந்த அசூரன் திரைப்படமானது, தனுஷ் நடிப்பிலும், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் இந்து சமூகத்தில் ஜாதியை புகுத்தும் விதமாகவும் சிறு வயதிலேயே ஒரு சிறுவன் வெடிகுண்டை வீசும் அளவிற்கு காட்சி அமைந்துள்ளதாகவும், ஆகவே வன்முறையை தூண்டும் விதமாக இந்த திரைப்படம் இருப்பதால் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமென்றும், இல்லாத பட்சத்தில், அகில பாரத இந்து மஹா சபாவின் மாநிலத்தலைவர் கல்கி ராஜசேகர் அவர்களின் அனுமதி பெற்று விரைவில் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரதாப், வர்த்தக அணி தலைவர் பிரபாகரன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.