திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (10:41 IST)

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை திடீரென திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19வது அவென்யூவில் உள்ள ரவீந்தர் வீட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நகராட்சி திட கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தொழிலதிபர் ஒருவரை மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் அவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்து உள்ளார் என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையின் முடிவில் ரவீந்தர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணம் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran