வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (12:08 IST)

எஸ் கே 14, எஸ்.கே 15 ரெடி ; ஆனால் எஸ்.கே 13 …? – சிவகார்த்திக்கேயன் பட இயக்குனர் புலம்பல் !

சிவகார்த்திக்கேயனுக்கும் அவரது ஆஸ்தான தயாரிப்பாளருமான ஆர் டி ராஜாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளதாகவும் அதனால் ரவிக்குமார் இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

ரெமோ படத்திற்குப் பின்னர் நடிகர் சிவகார்த்திக்கேயனின் ஆஸ்தான தயாரிப்பாளராக ஆர் டி ராஜா உருவெடுத்தார். தொடர்ந்து வேலைக்காரன், சீமாராஜா, இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் பெயர் அறிவிக்கப்படாத சயின்ஸ்பிக்‌ஷன் படம் என வரிசையாக இணைந்தனர். இந்த படத்திற்கு இப்போது எஸ்.கே 13 என தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் வேலைக்காரன் படமும், சீமராஜா படமும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதால் தேவையில்லாத நஷ்டம் உருவானது. இதனால் சீமராஜா ரிலிஸீன் போது ஒரு மிகப்பெரிய தொகைக் கடனாக இருவர் தலையிலும் விழுந்தது. அதனையடுத்து கடனுக்காக ரவிக்குமாரின் மெகா பட்ஜெட் படத்திற்கு முன்பாகவே ஒரு சிறிய பட்ஜெட் படத்தை உடனடியாக இருவரும் ஆரம்பித்தனர்.

மித்ரன் இயக்க இருக்கும் அந்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. இவை இல்லாமல் சிவகார்த்திக்கேயன், எம் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இறுதிக்க்கட்டத்தில் இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் நேற்று வெளியகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மித்ரன் இயக்கும் படத்தின் வேலைகளும் ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஆனால் 3 ஆண்டுகளாகக் காத்திருந்த இயக்குனர் ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தன் படத்திற்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட ராஜேஷ் படம் மற்றும் மித்ரன் படம் ஆகியவற்றில் மட்டும் சிவகார்த்துக்கேயன் கவனம் செலுத்தி வருவதால் இயக்குனர் ரவிக்குமார் தயாரிப்பாளர் மீதும் சிவகார்த்திக்கேயன் மீதும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இன்று நேற்று நாளை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தும் அடுத்தப்படத்தை மூன்று ஆண்டுகளாக எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தன் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளிடம் மனம் வருந்திப் புலம்பி வருகிறாராம்.