புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (19:44 IST)

இந்த பேரன்பைக் கண்டு கண்கலங்கி விட்டேன் - சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராம் இயக்குநர் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி , அஞ்சலி சாதனா அஞ்சலி ராம் உள்பட பலர் நடித்துள்ள படம் பேரன்பு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது.
யுவன் சங்கர் இசையமைப்பில் பாடல் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஈஸ்வர் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
இப்படத்தைப் பார்த்துவிட்டு திரையுலகினர் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். 
சிவகார்த்திகேயன் இப்படத்தை பார்த்துவிட்டு கூறியதாவது:
 
இப்படத்தில் வேறு மாதிரியான ஒரு மம்முட்டி சாரை பார்த்தேன்.நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மம்முட்டி சாரை ஏன் இந்தியாவின் லெஜெண்ட் என்று சொல்கிறார்கள் என்பதற்கு இப்படம் தான் சிறந்த உதாரணம். தங்கமீன்கள் படத்திற்குப் பிறகு சாதனாவுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என நினைக்கிறேன். இப்படத்தின்  இசை, ஒளிப்பதிவு, என் எல்லாமே அருமையாக உள்ளது. இப்படத்தை ராம் சார் எடுத்துள்ள விதம், உணர்ச்சிகள், உணர்வுகளைச் சொல்லி இருக்கும் விதத்தை பாராட்ட தெரியவில்லை. ஆனால் நிறைய காட்சிகளை பார்த்து கண் கலங்கிவிட்டேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.