திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (16:24 IST)

முதல் முதலாக கமர்ஷியல் ரூட்டில் இறங்கும் இயக்குனர் ராம்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை மாநாடு பட புகழ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படம் குறித்த பேசியுள்ள சுரேஷ் காமாட்சி ‘இயக்குனர் ராம் இயக்கும் முதன் முதலான கமர்ஷியல் படமாக இது இருக்கும். ஆனால் இது சர்வதேச தரத்திலான கதை. இயக்குனர் ராமின் திட்டமிட்ட உழைப்பு என்னை மிரளச் செயதது’ எனக் கூறியுள்ளார்.