ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (10:25 IST)

கம்மின்ஸ் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து… 147 ரன்னுக்கு ஆல் அவுட்!

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி வருகின்றனர். ஆஸி அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தனர். இதனால் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. கம்மின்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.