திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (08:06 IST)

காதலியைப் பிரிந்தாரா விஷ்ணு விஷால்… டிவீட்டால் பரபரப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய காதலி ஜூவாலா கட்டாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது  சமூக வலைதளங்களில் தங்கள் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு தராசில் ஒரு பக்கம் இதயமும் மறுபக்கம் பணமும் இருக்க, பணம் இருக்க தராசுப் பக்கம் கீழே இருப்பது போல உள்ளது.’ இதன் மூலம் பணத்தை விட காதல் பெரிதில்லை என்று சொல்வது போல உள்ளது. இதனால் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகியோருக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.