வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:46 IST)

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா துருவ நட்சத்திரம்!

துருவ நட்சத்திரம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல வருடங்களாக இந்த படம் முடியாமல் இருப்பதற்குக் காரணம் இயக்குனர் கௌதம் மேனன்தானாம். இந்நிலையில் இந்த படம் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் நீளம் 4 மணிநேரத்துக்கு மேல் உள்ளதால் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.